ads
என் குடியுரிமை பற்றி தேவையில்லாத சர்சையாக பேசப்படுவது வருத்தமளிக்கிறது: அக்ஷய் குமார்
ராம் குமார் (Author) Published Date : May 04, 2019 14:40 ISTபொழுதுபோக்கு
தற்போதைய மக்களவை தேர்தலில் அக்ஷய் குமார் தனது வாக்கை தாக்கல் செய்யாதது பற்றி குரல் எழுந்த பின்பு, அக்ஷய் குமார் தனது குடியுரிமை தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வரிகையில் அக்ஷய் குமார் கனடா குடியுரிமை பெற்றவர் என்றும் இதன் காரணமாக தான் மக்களவை தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
என் குடியுரிமை பற்றி தேவையில்லாத ஆர்வமும் மற்றும் எதிர்மறையை கருத்துகளையும் உண்மையாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. கனடிய பயண இசைவு சீட்டு வைத்திருப்பதை நான் மறைக்கவில்லை மறுக்கவும் இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் கனடாவிற்கு நான் சென்றிருக்கவில்லை என்பதும் உண்மை. நான் இந்தியாவில் வேலை செய்கிறேன், அதற்காக இந்தியாவிற்கு தக்க கடமைகளை வரி செலுத்துவதன் செய்கிறேன். இந்த ஆண்டுகளில், இந்தியாவின் மீதான எனது அன்பை யாருக்கும் நிரூபிப்பதற்கு ஒருபோதும் அவசியம் இல்லை, என் குடியுரிமை பிரச்சினை பற்றி தொடர்ந்து தேவையற்ற சர்ச்சைக்கு இழுக்கப்படுவது ஏமாற்றம் அளிக்கின்றது மேலும் இது என்னுடைய தனிப்பட்ட, சட்ட, அரசியல் அல்லாத விஷயம். நான் நம்புகிற காரியங்களை எனது சிறிய வழியில் தொடர்ந்து பங்களிப்பாற்ற விரும்புகிறேன் மேலும் இந்தியா வலிமை பெறவும் விரும்புகிறேன்.
அமிர் கான், ஷாருக் கான், பிரியங்கா சோப்ரா, அமிதாப் பச்சன்சந்த் சல்மான் கான் போன்ற பாலிவுட் நடிகர் நடிகைகளும் மற்றும் பல திரைப்படக் கலைஞர்கள் பலர் தங்கள் வாக்குகளை மகாராஷ்டிரா தொகுதியில் பதிவு செய்தார்கள். அக்ஷய் குமார் வாக்களிப்பு மையங்களில் எங்கும் காணப்படவில்லை.
தனது படங்களுக்கு தேசப்பற்று உள்ள தலைப்புகள் வைத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நேர்காணலை நடத்தினர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அக்ஷய் குமார் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரது தேசபக்தியை தோளில் சுமந்து காண்பிக்கின்றார்.