ரசிகர்களை கவருமா மிஸ்டர் லோக்கல்? சிவகார்த்திகேயன் - ராஜேஷ் பட விளம்பரம் தீவிரம்
ராம் குமார் (Author) Published Date : May 11, 2019 19:43 ISTபொழுதுபோக்கு
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் கோடைகால விடுமுறை காலத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் வரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். ஹிப் ஹாப் தமிழா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில் படத்தின் சிறு ப்ரோமோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருகியுள்ள படம் மே 17 அன்று உலகமெங்கும் வெளியாக தயாராக உள்ளது. இப்படம் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்ட தரமான கோடைகால வெற்றி படமாக அமையும் என கோலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கையாக உள்ளது. ராஜேஷ் தனது முந்தைய படங்களில் ரசிகர்களை கவரத்தவரி தோல்விகளை சந்தித்தாலும் இப்படம் அவரை வெற்றிப்பாதைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிவகார்த்திகேயன் தனது முந்தைய படங்களான சீமராஜா மற்றும் வேலைக்காரன் ஆகியவற்றில் வர்த்தக ரீதியாக தோல்வியை சந்தித்ததால் அவரும் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்து திரும்பிவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படங்களை வரிசையாக கைவசம் கொண்டுள்ள சிவகார்த்திகேயன் இயக்குனர் மித்ரன் பாண்டிராஜ் விக்னேஷ் சிவன் போன்றவர்களின் இயக்கத்தில் தொடர்ச்சியாக படங்களை முடித்து வெளியிடவுள்ளனர்.சக போட்டியாளர் விஜய் சேதுபதியின் பாணியை பின்பற்றும் சிவா வெற்றிக்கனியை எட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். மிஸ்டர் லோக்கல் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளது.
படத்தை மும்மரமாக விளம்பரப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நிறுவனம் தொடர்ந்து ப்ரோமோக்களை வெளியிடவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. படத்தின் விளம்பரம் எதிர்பார்த்த அளவு இல்லை என வருந்திய ரசிகர்களை கவரும் வகையில் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறது. இரண்டு வாரங்கள் திரையரங்கில் பிரீ ரன் எதிர்பார்க்கும் மிஸ்டர் லோக்கல் ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெறுமா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.