ads

மான்ஸ்டர் திரை விமர்சனம்: எஸ்ஜே சூர்யாவின் படம். ஹிட்டா, ஃபிளாப்பா?

மான்ஸ்டர் திரை விமர்சனம்: எஸ்ஜே சூர்யாவின் படம். ஹிட்டா, ஃபிளாப்பா?

மான்ஸ்டர் திரை விமர்சனம்: எஸ்ஜே சூர்யாவின் படம். ஹிட்டா, ஃபிளாப்பா?

ஒரு நாள் கூத்து படத்தின் இயக்குனர் திரு.நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் திரு.எஸ்.ஜே.சூர்யா அவர்கள், நடிகை ப்ரியா பவானி ஷங்கர், காமெடி நடிகர் கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ள புதிய திரைப்படம் மான்ஸ்டர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா படங்களிலேயே U சான்றிதழ் பெற்ற முதல் திரைப்படம் இந்த மான்ஸ்டர் படம் தான் என்று படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அவர் கூறியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படத்தில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒரு பொறியாளராக நடித்துள்ளார் நமது எஸ்.ஜே.சூர்யா. கூட பணிபுரியும் நண்பராக நடித்துள்ளார் காமெடி நடிகர் கருணாகரன் அவர்கள். திருமணம் செய்வதற்காக பெண்பார்க்க செல்கிறார் எஸ்.ஜே.சூர்யா, அங்கே மணப்பெண்ணாக வரும் ப்ரியா பவானி ஷங்கரை பார்த்து காதல் வயப்படுகிறார். சொந்த வீடு இருந்தால் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று ப்ரியா பவானி ஷங்கர் கூற. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கென சொந்தமாக ஒரு வீட்டை வாங்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. வீட்டில் பால் காய்ச்சி குடி இருக்கும் முதல் நாளிலேயே வீட்டில் ஒரு எலி இருப்பது அவருக்கு தெரியவருகிறது. சாதாரண எலி தானே என்று விட்டுவிடுகிறார். ஆனால் அந்த எலி செய்யும் சேட்டைகளால் மிகவும் நொந்து போகிறார் எஸ்.ஜே.சூர்யா.

அந்த எலி எஸ்.ஜே.சூரியாவையும் தாண்டி அவரது நண்பரான கருணாகரனையும் தொந்தரவு செய்கிறது. அந்த எலியை வீட்டைவிட்டு வெளியேற்ற இருவரும் படாதபாடு படுகின்றனர். எலியை விரட்ட அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிகிறது. நாளுக்கு நாள் எலியின் தொல்லை அதிகமாக ஆக இருவரும் எலியை பார்த்து பயப்பட ஆரம்பிகின்றனர். எலியின் புத்தி கூர்மையை பற்றி தெரிந்துகொண்டு வியகின்றனர். புத்திசாலி எலியால் புதிதாய் வாங்கிய வீடு தீப்பற்றிக் கொள்கிறது, அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் கூற இருவரும் போலீஸ் விசாரணைக்கு உள்ளகின்றனர். இந்த எலி தொல்லையில் இருந்து எப்படி விடுபட்டனர். வீட்டை விட்டு அந்த புத்திசாலி எலியை விரட்டினார்களா இல்லையா என்று மீதி கதையை காமெடியாக சொல்லியிருகிறார் இயக்குனர் நெல்சன் அவர்கள்.

எப்போதும் போல நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார். எலியை மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பது, எலியை விரட்டி அடிக்க வீட்டையே எரித்துவிடுவது போன்ற காட்சிகளில் அருமையாக நடித்துள்ளார். கருணாகரன் காமெடிகள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கொடுத்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். எல்லாத்தையும் தாண்டி படத்தில் நிஜ எலியை நடிக்க வைத்துள்ளனர். இந்த எலிக்கு பிரத்தியேகமாக ஒருவர் டப்பிங் செய்துள்ளார். எந்தவித கிராபிக்ஸ் இணைப்புகளும் இல்லாமல் நிஜ எலியை வைத்து காட்சிகளை உருவாகிய இருக்கின்றனர். ஒரு மிருகத்தை வைத்து படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல, காரணம் எந்த நேரத்தில் அது என்ன செய்யும் என்று தெரியாதது தான்.

இந்த நிஜ எலியை வைத்து இவ்வளவு நேர்த்தியான காட்சிகளை உருவாக்கிய பெருமை படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு.கோகுலையே சேரும். கதைக்கு ஏற்ற பின்னணி இசையை நேர்த்தியான முறையில் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். மொத்தத்தில் குடும்பத்துடன் ரசித்து பார்க்ககூடிய படமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது மான்ஸ்டர் திரைப்படம்.

மான்ஸ்டர் திரை விமர்சனம்: எஸ்ஜே சூர்யாவின் படம். ஹிட்டா, ஃபிளாப்பா?