மார்வெல் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இந்தியாவில் வசூல் சாதனை
ராம் குமார் (Author) Published Date : May 04, 2019 16:43 ISTபொழுதுபோக்கு
அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் வசூலில் அதுவும் இந்தியாவில் உச்ச எல்லையை தொட்டுள்ளது. மார்வெல்லின் 22 வது படமனா அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் வியாழக்கிழமை அன்று இந்தியாவில் மட்டும் ரூ 16.10 கோடியை வசூலித்தது. மேலும் இப்படத்தின் மொத்த வசூல் ரூ. 260.40 கோடியை எட்டியுள்ளயது. ரஸ்ஸோ சாகோதர்கள் - அந்தோணி மற்றும் ஜோ'வால் இயக்கப்படும் சூப்பர்ஹீரோக்களின் தோற்றம் இன்பினிட்டி வார் திரைப்படத்தில் உதித்தது. பின்பு ஐயன் மனின் பிறப்பு 2008 ஆம் ஆண்டில் திரைப்படத்தில் உதித்தது.
திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் ட்விட்டரில் சமீபத்திய வசூலை பகிர்ந்து கொண்டார். வெள்ளிக்கிழமை 53.60 கோடி, சனிக்கிழமை 52.20 கோடி, ஞாயிற்றுக்கிழமை 52.85 கோடி, திங்கட்கிழமை 31.05 கோடி, செவ்வைக்கிழமை 26.10 கோடி, புதன்கிழமை 28.50 கோடி , வியாழக்கிழமை 16.10 கோடி. மொத்தம்: ₹ 260.40 கோடி வசூல் ஆகி உள்ளது.
அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பாகுபலி 2 விட மார்வெல் படமானது முதல் வாரத்தில் இந்தியாவில் மிக அதிக வசூல் ஈட்டிய படமாக உள்ளது என தரன் தெரிவித்தார். அதிகமாக ட்வீட் செய்த படங்களில் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் 50 மில்லியன் ட்வீட் பெற்று உள்ளது என்று ட்விட்டர் வெளிப்பட்டது. ரசிகர்கலின் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் பட்டி தொட்டியெல்லாம் சென்றடையும் அளவிற்கு விளம்பரத்தை பெற்றது. அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது வரும் எண்ட்கேம், இந்தியாவிலும் உச்ச இடத்தை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் மார்வெல் திரையுலககத்தின் பேஸ் 3 முடிவடையும் நிலையில், கேப்டன் அமெரிக்கா, ஐயன் மேன், தோர் ஆகியோர் மார்வெல் உலகத்தை விட்டு விடைபெறுகின்றனர். ரசிகர்களை ஆண்டாண்டு காலமாக மகிழ்வித்து வந்த மார்வெல், தற்போது புதிய சூப்பர்ஹீரோக்களை களமிறக்க தயாராகவுள்ளது.