ads

முதல் பட ஹீரோயினை இயக்கும், இயக்குனர் அவதாரம் எடுத்த பிரபல ஹீரோ

Manmadhudu 2

Manmadhudu 2

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது "மாஸ்கோவின் காவிரி" எனும் ரொமண்டிக் தமிழ் திரைப்படம். பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. ரவி வர்மன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க தவறினாலும் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் பிரபல இசையமைப்பாளர் திரு.எஸ்.தமன் அவர்கள். இந்த படத்தில் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சமந்தா. இந்த படத்தில் மிகவும் எளிமையாக நடித்திருப்பார் அவர். முதல் படம் என்ற எந்த பயமும் இல்லாமல், எந்த வித ஃபார்மல் நடிப்பும் இல்லாமல். எதார்த்தமான நடிப்பை கொடுத்து அசத்தி இருப்பார் நடிகை சமந்தா. இந்த படத்தில் வரும் "கோரே கோரே" பாடல் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக இருக்கிறது.

சீமான், சந்தானம், ஹர்ஷவர்தன் என பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் நடிகர் ராகுல் ரவீந்திரன் அவர்கள். இது அவருக்கு முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். கடைசியாக "வணக்கம் சென்னை" படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். பிறகு பவன் குமார் இயக்கிய பிரபல தெலுங்கு திரைப்படமான "யு டர்ன்" படத்தில் நடித்தார். இந்த படத்திலும் நடிகை சமந்தா தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்பொழுது ராகுல் ரவீந்தர் தெலுங்கு திரையுகில் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கிய "சீ லா சோவ்" என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ராகுல் நடிகர் நாகார்ஜுனாவை வைத்து ஒரு புதிய தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே நாகார்ஜுனா நடித்த "மன்மதுடு" என்ற சூப்பர்-ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம். இதற்கு "மன்மதுடு 2" என்று பெயரிட்டுள்ளனர். பல தெலுங்கு பிரபலங்கள் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்துடன் ஒரு டுவிட்டர் பதிவை பதிவிட்டுள்ளார் நாகார்ஜுனா, அதில் "என்னுடைய மருமகள் சமந்தாவுடன் மன்மதுடு 2 வில் பணிபுரிந்தது சிறப்பான அனுபவம்.  இன்னும் சில புகைப்படங்கள் வெளியாகும், அதுவரை காத்திருங்கள்" என்று கூறியிருந்தார். இதனை பகிர்ந்த நடிகரும்  இயக்குநருமான ராகுல் ரவீந்திரன், "என்னுடைய முதல் பட ஹீரோயின் சமந்தாவை இயக்குவது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது. இதில் மேலும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் நீங்கள் இருவரும் எனது இயக்கத்தில் இணைந்து நடிப்பது தான்" என்று கூறியுள்ளார் ராகுல்.

முதல் பட ஹீரோயினை இயக்கும், இயக்குனர் அவதாரம் எடுத்த பிரபல ஹீரோ