ads
மம்மூட்டி ஒன் தமிழ் முழு படம் நெட்பிளிக்ஸ்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 20, 2021 08:07 ISTபொழுதுபோக்கு
மம்முட்டி நடித்த ஒன் திரைப்படம் மலையாளத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது, தற்பொழுது தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.
சந்தோஷ் விஸ்வநாத் இயக்கிய ஒன் திரைப்படம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக கதை நகர்கிறது. காயத்ரி அருண், சலீம் குமார் மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் இடம்பெறும் கதாபாத்திரத்திற்கு இடையில், மெகா ஸ்டார் மம்முட்டியை கேரள முதல்வராக அறிமுக படுத்தி, கதைக்கு ஒரு அழுத்தமான திரைக்கதையை அமைத்துள்ளனர்.
முதல்வர் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார், அங்கு நடுத்தர மக்கள் முதலமைச்சர் பாதுகாவலர்களால் அவதிக்குள்ளாகிறார்கள், இதை ஒரு பதிவாக ஒரு இளைஞன் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறான். இதன் காரணமாக முதலமைச்சரின் அராஜகம் என்று எதிர் கட்சிகள் போராட்டத்தை தொடங்க, இதற்கு காரணமான இளைஞனை காவல்துறை பிடிக்கின்றனர்.
விறுவிறுப்பான காட்சிகளுக்கு பிறகு முதலமைச்சராக காட்சி தருகிறார் மம்முட்டி. பிறகு செய்தியாளர்கள் மத்தியில் இளைஞனுடன் தனது பாதுகாவலர்களின் செயலுக்காக மன்னிப்பு கேட்கிறார்.
இதன் பிறகு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு முதலமைச்சர் கதாபாத்திரத்தின் மீது ஒரு அழுத்தம் ஏற்பட்டு பிறகு நடக்கும் சுவாரசியமான காட்சிகளால், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மேற்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் உட்கட்சி கருத்து வேறுபாடுகள், மக்களுக்கு உதவும் காட்சிகளில் - முதலமைச்சர் கதாபாத்திரத்தின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட வைக்கிறது.
ஒன் படத்தில் திரைக்கதைக்கு தகுந்த காட்சிகள் அமைத்து, ஒரு அரசியல் தலைவரின் வரலாறு படமாக இல்லாமல், எதார்த்தமான கட்சிகளுடன் அரசியல் திரில்லர் படமாக அமைந்துள்ளது.