குருதி மலையாள படம் விமர்சனம், மனிதநேயத்தின் முக்கியத்துவம்
விக்னேஷ் (Author) Published Date : Sep 01, 2021 20:25 ISTபொழுதுபோக்கு
பிரித்திவிராஜ் மற்றும் ரோஷன் மேத்யூ நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸான மலையாள படம் குருதி.
படத்தின் மையக் கரு, ஒரு இளைஞன் முதியவரை கொலை செய்கிறான். கொலை செய்யப்பட்ட முதியவரின் மகனாக வருகிறார் பிரித்திவிராஜ். யாருக்கும் தீங்கு நினைக்காத தனது தந்தையை கொலை செய்த இளைஞனை, தான் கொலை செய்ய தேடி அலைகிறார்.
போலீசார் இளைஞனை கைது செய்து மலை பகுதி வழியாக அழைத்து செல்லும்போது பிரித்திவிராஜ் குழுவிடம் மோதல் ஏற்படுகிறது, இவர்களிடம் இருந்து தப்பித்து கொலையாளியுடன் அருகில் இருக்கும் வீட்டில் பதுங்குகிறார் போலீஸ் அதிகாரி.
வீட்டில் இருக்கும் நபர்கள் போலீஸ் அதிகாரிக்கு உதவுகிறார்கள். இவர்களின் வீட்டில் இருப்பதை தெரிந்துகொண்ட பிரிதிவிராஜ், இளைஞனை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்கிறார்.
இளைஞனை பிரிதிவிராஜிடம் இருந்து காப்பாற்றினார்களா என்பது தான் கதையின் கிளைமாக்ஸ். விறுவிறுப்பான இத்திரைக்கதையை, ஹிந்து முஸ்லிம் இடையே நடக்கும் ஒரு கதையாக திரைக்கதை அமைத்துள்ளார் டைரக்டர்.
கொலை செய்யப்பட்ட முதியவர் ஒரு முஸ்லிம், கொலை செய்த இளைஞன் ஒரு ஹிந்து. இவர்களுக்கிடையே நிகழும் ஒரு விவாதத்தில் உணர்ச்சிவசப்பட்ட இளைஞன் முதியவரை கொலை செய்கிறான். மேலும் முக்கிய திருப்பமாக இருப்பது, போலீசார் அடைக்கலம் செல்லும் வீடு ஒரு முஸ்லிம் குடும்பம் வசிக்கும் வீடு.
முஸ்லிம் குடும்பம் இந்த சூழலில் எப்படி நேர்மையாக நடந்து கொண்டார்கள், மனித நேயத்தின் முக்கியத்துவத்தை அழகாக டைரக்டர் மிக சிறந்த முறையில் படமாக்கியுள்ளார்.