ads
மாஸ்டர் படம் எப்படி இருக்கு ?
கார்த்திக் (Author) Published Date : Jan 13, 2021 14:36 ISTபொழுதுபோக்கு
மாஸ்டர் படத்தின் முழு கதை கூறுவது தவறு. சுருக்கமாக கூறவேண்டும் என்றால், பல வருடங்களுக்கு முன் குருவி படத்தில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த விஜய் சேதுபதி, இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார் என்ற விமர்சனம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது. படத்தில் நடித்த சாந்தனு மற்றும் ஹீரோயின் எதற்காக நடித்தார்கள் என்பது இயக்குனர் தான் கூறவேண்டும், நட்சத்திர பட்டாளத்தில் அதிக கவனம் குறைவு.
மாஸ்டர் படத்தின் முதல் பகுதி லோகேஷ் கனகராஜ் படத்தை பார்பதுபோன்ற உணர்வு, படத்தின் இரண்டாம் பகுதி எப்பதான் முடிப்பீங்க என்று ரசிகர்கள் கொந்தளிக்கும் அளவிற்கு இருக்கிறது. மூன்று மணிநேர படம் என்றால், கிளைமாக்ஸ் காட்சி மிகவும் முக்கியம் ஆனால், தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் இது எதிர் பார்க்காத ஒன்று.
தளபதி விஜயின் நடிப்பு, சண்டை காட்சிகள் பிரமாதம், சில இடங்களில் தளபதியின் காமெடி ரசிக்க முடியவில்லை. என்னதான் சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் இயக்குனர் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து படங்களுக்குமே கதைக்கு முக்கியதுவம் கொடுக்கப்படும். ஆனால் வளரும் இயக்குனர் என்பதனால் விஜய் ரசிகர்களை உற்ச்சாக படுத்துவதாக நினைத்து ஹீரோயிசம் தூக்கலாக இருப்பதும், சொதப்பலான டயலாக் இருப்பதும், ரசிக்கும் படி இல்லை.
மாஸ்டர் படம், விஜய் ரசிகர்கள் கொண்டாடும் படம் ஆனால் மூன்று மணி நேரம் தான் கொஞ்சம் அதிகம், நீளத்தை குறைத்திருக்கலாம். மாஸ்டர் படத்தின் முன்பதிவு பல தியேட்டர்களில் ஞாயிறு வரை முடிந்துள்ளதால், படத்தின் வசூல் வழக்கம் போல் மிக சிறப்பு.
விஜயின் எந்த ஒருபடத்தையும் நல்ல விலைக்கு வாங்கினவர்கள் கண்டிப்பாக ஒருபோதும் நெஸ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. மாஸ்டர் படம் சுமாராக இருக்கிறது என்ற செய்திகள் வந்தாலும், விஜய் சிறந்த வசூல் மன்னன் என்பதனால், கண்டிப்பாக இந்த படம் நல்ல வசூல் படமாக தான் இருக்கும்.