ads

ஜிப்ஸி படம் எப்படி இருக்கு: திரை விமர்சனம்

ஜிப்ஸி படம்

ஜிப்ஸி படம்

விமர்சனம்: ஜிப்ஸி படம் எப்படி இருக்கு: நடிகர் ஜீவா நீண்ட வருடங்களுக்கு பின் நடித்துள்ள ஒரு நல்ல அழுத்தமான கதைக்களம் கொண்ட படம் ஜிப்ஸி. ராம் மற்றும் கற்றது தமிழ் படங்கள் எப்படி ஒரு முக்கியமான படமாக அமைந்ததோ, அதே போல் ஜிப்ஸி படமும் ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது.

குக்கூ மற்றும் ஜோக்கர் படங்கள் மூலம் நம்மை திரும்பி பார்க்கவைத்த இயக்குனர் ராஜு முருகன் இந்த ஜிப்ஸி படத்தை மிகவும் சிறப்பாகவே இயக்கியுள்ளார். இவரின் படங்கள் பொதுவாக அரசாங்கத்தை தாக்குவதை போலவே இருக்கும், அரசாங்கம் செய்யும் தவறுகளை எதார்த்தமாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணோட்டத்தில் இருந்து காட்சி அமைக்கப்படும்.

இயக்குனர் ராஜு முருகனின் ஜிப்ஸி படம் முழுக்க வெளி மாநிலங்களில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து கதையை நகர்த்தியுள்ளனர். ஜோக்கர் படத்தின் மைய கரு கருணை கொலை, ஜிப்ஸி படத்தின் மைய கரு கலவரத்தில் பாதிப்படைந்த மக்கள்.

படத்தில் ஒரு சில இடங்களில் இந்து மக்களை தவறாக சித்தரித்ததை போல தோன்றுகிறது, இதற்கு மத்தியில் இயங்கும் அரசாங்கம் இந்துத்துவத்தை அதிகம் பேசுவதால் இயக்குனர் சில இடங்களில் இவர்கள் வன்முறையாளர்களை போல காண்பித்தாரா அல்லது கதைக்கு ஏற்ற மக்களை காண்பித்தாரா  என்று தெரியவில்லை.

ஜிப்ஸி படம் எப்படி இருக்கு: திரை விமர்சனம்

படத்தை பார்த்தவர்களில் சிலர் ஜோக்கர் படத்தை ஒப்பிட்டு, இதுவும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை கொடுத்த  படமாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரும்பாலான மக்கள் படத்தை மிகவும் ரசித்ததாக தெறிவித்தனர்.

ஒரு சில பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நடந்த கலவரத்தையும் அதை முழுமையாக விவரிக்காமல் , தனக்கு சரி என பட்டத்தை இயக்குனர் காட்சி படுத்தியுள்ளார் என தெரிவித்தனர்.

நடிகர் ஜீவா வழக்கம் போல படத்தில் அசத்தியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையில் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு இருக்கிறார். படத்தில் நடித்த அனைவரும் எதார்த்தமாக நடித்து அசத்தியுள்ளார். இவர்கள் நிஜ வாழ்க்கையில் இப்படி பட்டவர்களா அல்லது நடிகர்களா என்று சிந்திக்க வைக்கும் அளவிற்கும் அனைத்து கதாபாத்திரங்களும் நடிப்பில் அசத்தியுள்ளார்கள்.

ஜிப்ஸி படத்தை தாராளமாக ஒருமுறை திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம், நல்ல படம்.

ஜிப்ஸி படம் எப்படி இருக்கு: திரை விமர்சனம்