ads

பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம், அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம்

நடிகை சுரேகா வாணி

நடிகை சுரேகா வாணி

தமிழ் திரையுலகில் தற்பொழுது பிரபலமாகி வரும் குணச்சித்திர நடிகை சுரேகா வாணி ஆவார். இவர் அஜித் குமார் நடிபில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விஸ்வாசம் படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்திருப்பார். இளைய தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்திலும் பிளாஷ்பேக் காட்சிகளில் வருவர் சுரேகா. இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் நடிகை சுரேகா வாணி.

மேலும் இவர் காதலில் சொதப்புவது எப்படி, தெய்வத்திருமகள், எதிர்நீச்சல், ஜில்லா, பிரம்மன் உத்தமபுத்திரன் போன்ற சூப்பர்-ஹிட் படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆவார். நடிகை சுரேகா வாணி கடந்த 2005 ஆம் ஆண்டு முதன் முதலில் தெலுங்கு திரைகளில் அறிமுகமானார். இவர் திரைப்படங்களில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தார் இவரது கணவர் சுரேஷ் தேஜா. தம்பதிகள் இருவரும் இணைந்து தெலுங்கில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றி பணிபுரிந்து வந்தனர். இருவரும் இணைந்து பழ பிரபலமான ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தனர். இவரை முதல் முறை திரைப்படங்களில் அறிமுகப்படுத்தினார் தெலுங்கு இயக்குனர் திரு.பூசல ராதாகிருஷ்ணன். கணவரின் ஆசியுடன் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் நடிகை சுரேகா வாணி.

சுரேகா வாணியின் கணவரான சுரேஷ் தேஜா ஆந்திராவில் பிரபல தொலைக்காட்சியான மா டி.வி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். மேலும் சில நிகழ்சிகளை அதே தொலைகாட்சியில் தயாரித்தும் வந்தார். தெலுங்கு திரையுலகில் இவருக்கு நல்ல பெயர் இருந்து வந்துள்ளது. திரைப்படங்களை இயக்கவும் இவர் தன்னை தானே தயார் செய்துகொண்டிருந்ததும் தற்பொழுது தெரியவந்துள்ளது. தம்பதியினர் இருவருக்கும் சுப்ரிதா என்ற ஒரு மகளும் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைப்பாட்டால் அவதிப்பட்டு வந்துள்ளார் சுரேஷ் தேஜா அவர்கள். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சுரேஷின் மரண செய்தி திரைத் துறையைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த அவர், இப்படி குறைந்த வயதிலேயே மரணமடைந்ததால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சோகமடைந்துள்ளனர்.

பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம், அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம்