தனுஷ்: ஒரு வழியாக படம் இந்தியாவில் திரையிடப்போவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்
கௌரிசங்கர் (Author) Published Date : May 20, 2019 21:46 ISTபொழுதுபோக்கு
நடிகர் தனுஷ் முதல் முறையாக ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் "தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்". இந்த படம் பாரிசில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தை பற்றி ஹாலிவுட் கலைஞர்களும் பாராட்டினர். இந்த படம் தமிழில் "வாழ்கையை தேடி நானும் போனேன்" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது இந்த ஹாலிவுட் படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு "பக்கிரி" என்று பெயர் வைத்துள்ளனர். உலக சினிமா சந்தையில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் இந்தப் படத்தின் பெரும்பாலான நாடுகளின் வெளிநாட்டு உரிமையைச் சோனி பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இந்த படம் சென்ற வருடம் மே மாதம் பாரிசில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தமிழ் வெர்ஷனின் விநியோகஸ்த்த உரிமையை பெற்றுள்ளனர் பிரபல தயாரிப்பு நிறுவனமான "வோய் நாட் ஸ்டுடியோஸ்".
இந்த படத்திற்கான விளம்பரங்கள் பாரிசில் நடந்த பொழுது. இந்த படத்திற்கான மீடியா சந்திப்பு அங்கே நடந்தது. அதில் கலந்துக்கொண்ட நடிகர் தனுஷ், பேச ஆரம்பிப்பதற்கு முன் தமிழகத்தில் தூத்துக்குடியில் காவல் துறையின் துப்பாக்கி சூட்டில் பலியான தமிழர்களின் உயிர்களுக்காக, பாரிஸ் மக்களை சில நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தக் கேட்டுக்கொண்டார். பாரிஸ் மக்களும் நடிகர் தனஷ் கேட்டுக்கொண்டவாறு, ஒரு நிமிடம் தூத்துக்குடியில் உயிரிழந்த தமிழர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து இந்திய பிரபலங்களும் தனுஷ்யின் இந்த செயலுக்காக அவரை பாராட்டினர்.
தமிழ்படம், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்களை தயாரித்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் "வோய் நாட் ஸ்டுடியோஸ்". நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாக்கி இருக்கும் திகில் படமான "கேம் ஓவர்" படத்தை தற்பொழுது தயாரித்து இருக்கின்றனர். "கேம் ஓவர்" படம் ரிலீஸுக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் ஹாலிவுட் படமான இந்த "தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்" படத்தின் தமிழ் வெர்ஷனின் விநியோகஸ்த்த உரிமை கிடைத்தது பெருமைக்குரிய தருணமாக கருதுகிறது "வோய் நாட் ஸ்டுடியோஸ்". இந்த தகவலை அவர்களது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
படத்தை இயக்கியுள்ளார் பிரபல இயக்குனர் "கேன் ஸ்காட்". இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் "அமித் த்ரிவேதி". இந்த படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு எழுத்தாளர் திரு.மதன் கார்கி அவர்கள் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த விஷயம் குறித்து நடிகர் தனுஷ் கூறியதாவது, "ஒரு வழியாக படம் இந்தியாவில் திரையிடப்போவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். என்னை வியக்கவைத்து, உழைப்பதற்கு வாய்ப்பு கொடுத்த எனது ரசிகர்களுடன் எனது ஹாலிவுட் படத்தை பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். தமிழில் வரும் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர் "வோய் நாட் ஸ்டுடியோஸ்".