ads
தேவராட்டம் படம் எப்படி இருக்கு திரைவிமர்ச்சனம்
புருசோத்தமன் (Author) Published Date : May 03, 2019 17:05 ISTபொழுதுபோக்கு
வெற்றிப்பட இயக்குனர், கிராமத்து இயக்குனர், பாசத்தை மையமாக வைத்து இயக்கும் இயக்குனர் என்று பெயர் எடுத்த முத்தையா அவர்களின் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் தேவராட்டம், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். நேற்று இந்த படம் வெளியானாலும், இன்று அருள்நிதி நடிப்பில் திரைக்கு வந்த K -13 படத்தினால் தேவராட்டம் படத்திற்கான இரண்டு காட்சிகளை K-13 படத்திற்கு சில திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டது.
இயக்குனர் முத்தையாவின் வழக்கமான கிராமத்து மன்வாசனையுடன் இருக்கும் குடும்ப படம், இதில் அக்கா தம்பிக்கு இருக்கும் பாசத்தை மையமாக வைத்து இயக்கியுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் தனது தந்தையையும் தாயையும் கதாநாயகன் கௌதம் கார்த்திக் இழக்க நேரிடுகிறது, பின் தனது அக்கா குடும்பங்களுடன் வளர்வதை கலகப்பபுடன் காட்சிகள் நகர்கிறது. வில்லன் காட்சிகள் பலமாக இருந்தாலும், வலுவான லாஜிக் திரைக்கதை இடம்பெறாதலால் இரண்டாம் பகுதி சுமாராக இருக்கிறது.
கதாநாயகியாக மஞ்சிமா மோகன், நகைச்சுவைக்காக சூரி, சிங்கம் புலி போன்றவர்கள் உள்ளனர். லாஜிக் இல்லாமல் பார்த்தால், நல்ல ஒரு கதை களத்துடன் குடும்பத்துடன் ஒருமுறை காண்பதற்கு நல்ல படம். இயக்குனர் முத்தையா வழக்கம்போல் ஒரு சிறந்த குடும்ப படத்தை கொடுத்துள்ளார்.