ads
comali release date: கோமாளி திரைப்படத்தின் வெளியீட்டு நாள் அறிவிப்பு
ராம் குமார் (Author) Published Date : Jul 09, 2019 11:44 ISTபொழுதுபோக்கு
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தும்பா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதற்கு முன் முழு நீள கதாநாயகனாக அடங்கமறு படத்தில் நடித்தார். இப்படம் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியானது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த படமான கோமாளியில் நடித்து வருகின்றார்.
அறிமுக இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கற்பனை எல்லையை தாண்டிய பொழுதுபோக்கு படமாக இயக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஒன்பது வித்தியாச தோற்றத்தில் வருவதாகவும் அவற்றில் 5 தோற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கும் என அறியப்படுகின்றது. கோமலியின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இறுதியாக வெளிவந்துள்ளது.
சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோமாளி உலகளவில் வெளியாக உள்ளன. வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் படத்தினை தயாரித்துள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். நீண்ட எதிர்பார்ப்புகளை உடைய இப்படம் ரசிகர்களின் மனதை கவருமா என பொறுத்திருந்து காண்போம்.