ads
கேயாஸ் வாக்கிங் முழு படம் தமிழ் விமர்சனம்
ராசு (Author) Published Date : Apr 11, 2021 20:15 ISTபொழுதுபோக்கு
ஸ்பைடர் மேன் புகழ் டாம் ஹாலண்ட் மற்றும் டைஸி ரைட்லி நடிப்பில் வெளியான படம் கேயாஸ் வாக்கிங். 2257 வருடத்தில், பூமியை போல் இருக்கும் ஒரு புதிய உலகில் நடக்கும் கதை தான் கேயாஸ் வாக்கிங்.
2008 ஆம் ஆண்டு வெளியான "The Knife of Never Letting Go" புத்தகத்தின் தழுவல் தான் கேயாஸ் வாக்கிங் படம், மார்ச் 5ஆம் தேதி 2021 ஆண்டு அமெரிக்காவில் முதலில் ரிலீஸ் ஆனது.
புதிய பூமியில் இருந்து மனிதன் வாழ்ந்த பூமிக்கு திரும்ப செல்ல இருக்கும் பயண தூரம் சுமார் 64 ஆண்டுகள். இவ்வளவு தொலைதூரம் கொண்ட பயணத்தில் விண்கலத்தில் மனிதன் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தான் மேலும் மண்ணை பார்க்காத புதிய தலைமுறைகளின் வாழ்கை, புதிய உலகிற்கு வந்த பின்பு எப்படி இருக்கிறது என்பதை அழகாக படமாக்கியுள்ளனர்.
புதிய பூமியில் இருக்கும் மனிதர்கள் எந்த ஆண்டில் வந்தார்கள், ஒரு குறிப்பிட்ட ஊரில் பெண்கள் மட்டும் கொள்ளப்படுகிறார்கள், இந்த புதிய உலகிற்கும் மனிதன் வாழ்ந்த உலகிற்கும் இருக்கும் வித்தியாசங்களை படத்தில் சுவாரசியமாக காண்பித்துள்ளார்கள்.
படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் இல்லை ஆனால், ஆடம்பரம் இல்லாத விறுவிறுப்பான திரைக்கதை. இந்த படத்தில் வரும் வசனங்கள் பல எதிர்பார்புகளை உண்டாகிறது, ஆனால் இரண்டாம் பாகம் வந்தால், எதிர்பார்க்கலாம்.
கேயாஸ் வாக்கிங் படத்தின் கதை
பெண்கள் இல்லாமல் ஒரு ஊரில் வாழும் ஒரு இளைஞனை பின்தொடர்கிறது கதை. இந்த உலகத்தில் பெண்களை தவிர்த்து அனைத்து உயிரினங்களும் தாங்கள் மனதிற்குள் நினைக்கும் எண்ணங்களை தலைக்கு மேல் ஓடும் படங்களாக ஒலியுடன் கேட்கிறது.
புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், நமது மைண்ட் வாய்ஸ் அனைவருக்கும் கேக்கும். வேறும் மைண்ட் வாய்ஸ் என்று நினைக்க வேண்டாம், அதற்கும் ஒருபடி மேல் சென்று இவர்கள் நினைக்கும் காட்சிகளையும் பார்க்க முடியும்.
இந்த புதிய உலகத்திற்கு விண்கலம் மூலம் வரும் நபர்கள் தரையிறங்கும்போது விபத்தில் இறந்து விடுகிறார்கள், ஒரு பெண் மட்டுமே உயிர் பிழைக்கிறார். டைஸி ரைட்லி அந்த பெண்ணாக நடித்துள்ளார்.
இந்த பெண்ணை முதலில் பார்க்கும் இளைஞனாக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார், எப்படி அந்த பெண்ணை காப்பாற்றுகிறார், தனது குழுவிடம் தொடர்பு கொள்ள இவர்கள் செல்லும் பாதையில் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பது தான் கதை.
தங்களது மைண்ட் வாய்ஸ் மூலம் வரும் காட்சிகளால் இவர்கள் யாரிடமும் எதையும் மறைக்க முடியாது. தலைக்கு மேல் தோன்றும் காட்சிகளின் ஒளிப்பதிவுகள் தூரத்தில் இருந்தாலும் தெரியும்.
இது மட்டுமே இந்த புதிய உலகின் முக்கிய சுவாரசியம். இதை வைத்து இங்கு வாழும் மனிதர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், இதை வைத்து நாயகி டைஸி ரைட்லி பல இடங்களில் டாம் ஹாலண்ட் மூலம் தன்னை காப்பாற்றிக்கொள்கிறார்.