ads
கேயாஸ் வாக்கிங் படத்தில் ஆண்களுக்கு கிடைத்த அதிசிய சக்தி
ராசு (Author) Published Date : Apr 11, 2021 22:14 ISTபொழுதுபோக்கு
பூமியை போல் இருக்கும் ஒரு புதிய பூமிக்கு மக்கள் 64 ஆண்டுகள் பயணம் செய்து கண்டுபிடிக்கிறார்கள். புதிய பூமியில் தரையிறங்கிய பின்பு இவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது, அது ஆண்களுக்கு மட்டுமே நடக்கும் ஒரு அதிசியம். இதை வைத்து தான் கேயாஸ் வாக்கிங் படத்தின் கதை நகருகிறது.
புதிய பூமியில் தரையிறங்கிய பிறகு, ஆண்கள் என்ன நினைத்தாலும் அது மற்றவர்களுக்கு ஒலியுடன் காட்சிகளாக தெரியும். இந்த நிகழ்வை சத்தம் என்று குறிப்பிடுகின்றனர்.
இதை மனிதர்கள் ஒரு சக்தியாக நினைக்கிறார்கள் மேலும் இதை தங்களுக்கேற்ப கட்டுப்படுத்தி மற்றவர்களுக்கு கேட்காமல் இருக்கு முயற்சி எடுக்கிறார்கள்.
சில மனிதர்கள் இந்த சக்தியை வைத்து மற்றவர்களுக்கு உண்மையான உருவத்தை காட்சிகளாக காண்பிக்கும் அளவிற்கு கற்றுக் கொள்கிறார்கள்.
இது போன்ற சக்தி பெண்களுக்கு இல்லை, இதுவே இவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. ப்ரெண்டிஸ்ஸ்டவுன் என்ற குடியேற்றத்தில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் போகிறது.
இவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் போவதை ப்ரெண்டிஸ்ஸ்டவுன் மேயரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது ஆளுமை தனத்திற்கு பெண்கள் எதிர்களாக இருப்பார்கள் என நினைத்து, பெண்கள் அனைவரையும் கொள்ள முடிவெடுக்கிறான்.
தனக்குள்ள சக்தியை வைத்து பல யுக்திகளை கற்றுக் கொண்ட மேயர் மற்ற ஆண்களின் நினைவுகளை தனக்கு சாதகமாக்கி, இவர்கள் வாழும் நகரத்தில் பெண்களை கொலை செய்கிறான். இதன் காரணமாக குழந்தைகள் தாய் பாசம் இன்றி வளருகிறார்கள்.
ப்ரெண்டிஸ்ஸ்டவுன் நகரில் வாழும் பெரும்பாலான இளம் வயதினர்கள், தங்களது அம்மாக்கள் மற்றும் மற்ற பெண்கள் இதே பூமியில் வாழும் ஸ்பெக்ள் உயிரினிகளால் கொல்லப்பட்டுள்ளதாக நம்ப வைக்க படுகிறது.
இந்த சூழ்நிலையில் வயோலா (டைஸி ரைட்லி) என்ற பெண், புதிய பூமியில் தனது குழுக்கான இடத்திற்காக விண்கலத்தில் இருந்து தரையிறங்கும் இடம் ப்ரெண்டிஸ்ஸ்டவுன்.
பெண்களை கொலை செய்யும் இந்த நகரத்தில் வந்திறங்கும் வயோலா (டைஸி ரைட்லி), இவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்க போகிறார் என்பது தான் கதையின் முக்கிய பங்கு.