பிஸ்கோத் முழு தமிழ் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் பதிவிறக்கம் செய்ய லீக் செய்துள்ளது
விக்னேஷ் (Author) Published Date : Nov 18, 2020 16:33 ISTபொழுதுபோக்கு
இந்த வருடம் தீபாவளி பண்டிகையில் பெரிய திரையில் வெளியான படம் பிஸ்கோத். கொரோன ஊரடங்கிற்கு பின் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம் பிஸ்கோத்.
பிஸ்கோத் முழு தமிழ் படத்தையும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம், படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன சில மணி நேரத்தில் இணையத்தில் கசியவிட்டது.
மக்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களுக்கு வருவார்களா என்று மிகுந்த குழப்பத்தில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்லதே நடந்தது, மக்கள் தீபாவளி நாளன்று மகிழ்ச்சியுடன் தியேட்டரில் படம் பார்த்தனர்.
அரசின் வழிகாட்டுதலின் படி, திரையரங்குகளில் ஒவ்வொரு இருக்கைக்கு இடைவெளி விட்டு பார்வையாளர்களை அமரச்செய்தனர். இதிலும் சிலர், தனது கேமெராவுடன் வந்து படத்தின் திருட்டு பதிவை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக தமிழ் ராக்கர்ஸ், தமிழ் யோகி, தமிழ் எம்வி போன்ற இணையதளங்களில் பல தரத்தில் பிஸ்கோத் முழு படத்தையும் பதிவிறக்கம் செய்துகொள்ள இலவசமாக லீக் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏழு மாதங்களாக படங்களை ரிலீஸ் செய்யாமல் இருந்த தயரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் பிஸ்கோத் முழு படத்தை கசியவிட்டது, வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஸ்கோத் படத்தின் நாயகன் சந்தானம், இந்த படத்தில் ஓவர் நக்கல் அடித்திருப்பதால், அதிகம் சலிப்பு தட்டுகிறது. நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவிற்கு சிரிக்கும்படி இல்லை.
படத்தின் வசூல் குறைவாக இருப்பதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சில திரையரங்குகள் தீபாவளிக்கு புதிய படங்களை ரிலீஸ் செய்யவில்லை, இதனால் வசூல் குறைவாகவே இருக்கும்.
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் பிஸ்கோத் படத்தை இணையத்தில் லீக் செய்தது, மேலும் வசூல் பாதிப்பை ஏற்படுத்தும்.