பீஸ்ட் திரையரங்கில் வெளியான சில மணிநேரங்களில் ஆன்லைனில் கசிந்தது
புருசோத்தமன் (Author) Published Date : Apr 13, 2022 22:12 ISTபொழுதுபோக்கு
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் "பீஸ்ட்" ஏப்ரல் 13ஆம் தேதி பெரிய திரையில் உலகெங்கிலும் ரிலீஸ் ஆனது.
விஜய், பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் விஜய்யின் நடிப்புக்கு ரசிகர்கள், திரைப்பட விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர், மேலும் படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
படம் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே, படத்தின் திருட்டு நகல் ஆன்லைன் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போது படம் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது "பீஸ்ட்" இணையத்தில் இலவசமாக டவுன்லோட் செய்து பார்க்கும் அளவிற்கு கசிந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கலக்கமும் கோபமும் அடைந்துள்ளனர்.
ஊடக அறிக்கைகளின்படி, டோரண்ட் மற்றும் தமிழ் ராக்கர்ஸ் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களில் "பீஸ்ட்" ஆன்லைனில் கசிந்துள்ளது என்றும், அதைக் தேடும் பதிவு ஆன்லைனில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
திரைப்படங்களை திருட்டு தனமாக எடுப்பவர்கள் மீது தயாரிப்புக் குழு மிகவும் எச்சரிக்கையாக இருந்ததாகவும், திரையரங்குகளில் படத்தைப் பார்த்த நபர்களில் ஒருவர் மிக தொழிநுட்பத்தில் "பீஸ்ட்" முழு படத்தையும் பதிவு செய்து, இனளயத்தில் படத்தை கசியவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைனில் கிடைக்கும் திருட்டு பதிப்பு குறித்து திரைப்பட தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.