அயோக்யா திரை விமர்சனம்: சமூக கருத்தை அழுத்தமாக பதிவு செய்தது
கௌரிசங்கர் (Author) Published Date : May 13, 2019 13:12 ISTபொழுதுபோக்கு
நடிகர்கள்: விஷால், ராஷி கண்ணா, கே.எஸ்.ரவிகுமார், பார்த்திபன்.
தயாரிப்பு: ஸ்டுடியோ க்ரீன்.
இயக்கம்: வெங்கட் மோகன்.
கதை சுருக்கம்: ஒரு கெட்ட போலீஸ் நல்லவனாக மாறி, பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு
தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதை.
விமர்சனம்: தூத்துக்குடியில் திருட்டுத் தொழில் செய்யும் ஆனந்த்ராஜிடம் ஆதரவற்ற சிறுவனாக வந்து சேருகிறார் விஷால். ஒருநாள் ஆனந்த்ராஜை ஒரு போலீஸ்காரர் நடுரோட்டில் பொரட்டி எடுக்க. போலீஸ் தான் கெத்து என்று தெரிந்துகொண்டு பல கோல்மால் வேலைகளை செய்து போலீஸ் ஆகிறார் விஷால். சென்னையில் பிரபல ரவுடியான பார்த்திபனுக்கு விஷால் தேவைப்பட சென்னைக்கு மாற்றப்படுகிறார் விஷால்.
சென்னையில் ராஷி கண்ணாவை பார்த்ததும் காதல்வயப்படுகிறார் விஷால். விஷாலும் பார்த்திபனும் அடிக்கும் கேடுகெட்ட லூட்டியை பார்த்து வருத்தப்படுகிறார் கான்ஸ்டபிள் கே.எஸ்.ரவிகுமார். ஒரு முறை வேறு ஒரு பெண்ணிற்கு பதிலாக ராஷி கண்ணாவை மாற்றி கொலை செய்யப் போகிறார் பார்த்திபன். அவர் விஷாலின் காதலி என்றதும் விட்டுவிடுகிறார். ஆனால் ராஷி கண்ணா எப்படியாவது கொல்லப்படப்போகும் பெண்ணை காப்பாற்ற சொல்கிறார். அந்த பெண்ணை காப்பாற்றி பார்த்திபனை எதிர்கிறார். பிறகு நல்ல போலீசாக மாறி பார்த்திபனையும், மற்ற கெட்டவர்களையும் எதிர்த்து போராடுகிறார்.
பெண்களை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த கூட்டத்தை வேரோடு அளிக்கிறார், அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கித்தருகிறார் விஷால். ரீமேக் படம் என்றாலும் மேக்கிங்கில் பட்டையை கிளப்பி உள்ளனர் படக்குழுவினர். கிளைமாக்ஸில் ஹீரோ இமேஜை இடைத்து நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார் விஷால். கேடுகெட்ட போலீசாக முதல் பாகத்தில் அந்த கதாபாத்திரத்தின் மேல் நமக்கே கோபம் வரும் அளவிற்கு நடித்துள்ளார். சாம்.சி.எஸ் இசையில் கண்ணே கண்ணே பாடலை தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் சுமார் தான். பின்னணி இசை காட்சிக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிகுமார்,
பார்த்திபன், ராஷி கண்ணா மூவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்றாக நடித்துள்ளனர். படத்தில் ஒரே ஒரு ஓட்டை தான் ஒரு போலீஸ்காரனுக்கு இவ்வளவு அதிகாரம் யார் கொடுத்தது என்பது தான். மசாலா படமாக இருந்தாலும் பார்க்க அர்த்தமே இல்லாமல் இருக்கிறது.