ads

அயோக்யா படம் திரை விமர்சனம்

அயோக்யா படம் திரை விமர்சனம்

அயோக்யா படம் திரை விமர்சனம்

அயோக்யா படம் திரை விமர்சனம்: பைனான்ஸ் பிரச்சனையில் இருந்து ஒரு வழியாக மீண்டு இன்று காலை காட்சி முதல் திரையரங்குகளில் விஷால் நடிப்பில் அயோக்யா படம் வெளியானது. தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் விஷால் தலைவராக இருந்தாலும் தான் நடித்த படத்திற்கே குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனால் மற்ற நடிகர்களின் நிலை என்ன.

அயோக்யா படம் தெலுங்கு டெம்பர் படத்தின் ரீமேக் படம் என்பது அனைவரும் அறிந்தது இருந்தாலும் தெலுங்கில் வெற்றி படம் என்பதாலும், விஷால் நடித்திருக்கிறார் என்பதலால் நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது. முதல் முறை நடிகை ராஷி கண்ணாவுடன் இனைந்து நடித்துள்ளார் நடிகர் விஷால்.

மேலும் நடிகர் மற்றும் இயக்குனர் திரு.பார்த்திபன் அவர்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், காமெடி நடிகர் யோகி பாபு, சானா கான் மற்றும் ராகுல் தாத்தா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸின் முதல் உதவி இயக்குனரான திரு.வெங்கட் மோகன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜூனியர் NTR மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்த தெலுங்கு திரைப்படமான “டெம்பர்” திரைப்படம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து அதற்கான தீர்வையும் சொல்லும் படமாக இருந்தது.

அதாவது, பெண்களை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆண்களுக்கு உடனடியாக தண்டனை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுகிறது. இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? இல்லை புதிய சட்டம் இயற்றப்படுமா? என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

அயோக்யா படம் திரை விமர்சனம்