ads
அயோக்யா புதிய பிரச்சனை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில்
கௌரிசங்கர் (Author) Published Date : May 11, 2019 21:12 ISTபொழுதுபோக்கு
அயோக்யா: தமிழ் திரைத்துறைக்கு ஒரு மாபெரும் சவாலாக நடத்தப்பட்டு வரும் ஒரு இணையதளம் என்றால் அது "தமிழ் ராக்கர்ஸ்" தான். எந்த புதிய படம் வெளியானாலும் அத்த படம் வெளியான சில மணிநேரங்களில் இந்த இணையதளத்தில் குறிப்பிட்ட அந்த படத்தை வெளியிட்டுவிடுகின்றனர்.
நடிகர் விஷால் இந்த தமிழ் ராக்கர்சை ஒழித்துக்கட்ட பல முயற்சிகளை எடுத்து வருகிறார் ஆனால் எந்த முயற்சியும் இதுவரை பலனளிக்கவில்லை. ஃபீனிக்ஸ் பறவை மாதிரி அளிக்க அளிக்க மீண்டும் புதிய டொமைன்களில் வந்து விடுகிறார்கள் "தமிழ் ராக்கர்ஸ்".
தமிழ் ராகர்ஸ் தற்பொழுது விஷால் நடித்து வெளிவந்த புதிய திரைப்படமான "அயோக்யா" படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த தகவல் தமிழ் திரைப்படத்துறை பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் NTR அவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் "டெம்பர்". இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் நடிகர் விஷால் மற்றும் நடிகை ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா திரைப்படம். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிகர் விஷால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இன்டர்நெட்டில் வெளியாகும் புதிய திரை படங்களை மக்கள் பார்ப்பதை தவிர்த்தல் தமிழ் திரை உலகில் பணியாற்றும் சிறு சிறு கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.