டைட்டானிக்கை மூழ்கடித்துவிட்டது அவெஞ்சரஸ்! சொன்னது யார் தெரியுமா? விவரம் உள்ளே
கௌரிசங்கர் (Author) Published Date : May 10, 2019 15:23 ISTபொழுதுபோக்கு
ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவர்களது இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாண்டமான சூப்பர் ஹிட் திரைப்படம் “டைட்டானிக்” இந்த படம் இது நாள் வரை யாராலும் மறக்கமுடியாத ஒரு காதல் காவியமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை நிஜமாக கடலில் மூழ்கிய “டைட்டானிக்” என்ற சொகுசுக் கப்பலின் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கதாநாயகனாக நடித்திருந்தார், நடிகை கேட் வின்ஸ்லெட் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இருவரும் நிஜ காதலர்களாகவே நடித்திருப்பார்கள் ஆனால் உண்மையில் இருவரும் இன்று வரை இணைப்பிரியா நண்பர்களாக இருந்து வருகின்றனர். டைட்டானிக் படம் பதினான்காவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பதினோரு விருதுகளை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நாள் வரை உலக அளவில் அதிக வசூல் சாதனை படத்தை படமாக இருந்து வந்தது. தற்பொழுது வெளியான “அவெஞ்சரஸ் எண்ட்கேம்” திரைப்படம் உலக அளவில் டைட்டானிக் படைத்த வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
பல்வேறு சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை கொண்டு உருவான அவெஞ்சரஸ் படத்தின் இறுதி பாகமான “அவெஞ்சரஸ் எண்ட்கேம்” திரைப்படம் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளிலேயே சீனாவில் 750 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது. தற்போது 2 பில்லியன் டாலர்களை வெகுவிரைவில் எட்டிய படம் என்ற சாதனையைப் படைத்ததோடு, அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் டைட்டானிக்கை முந்தியுள்ளது “அவெஞ்சரஸ் எண்ட்கேம்” திரைப்படம்.
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய “டைட்டானிக்” படம் இந்த வசூலை 47 நாட்களில் எட்டிய நிலையில், வெளியான 11 நாட்களில் இந்த வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்”. இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படம் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததற்கு ஜேம்ஸ் கேமரூன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு ஐஸ்பெர்க் உண்மையான டைட்டானிக்கை மூழ்கடித்தது. தற்போது அவெஞ்சர்ஸ் திரைப்படம் எனது டைட்டானிக்கை மூழ்கடித்துவிட்டது” என்று கூறியுள்ளார். மேலும் “உலக திரைப்பட ஜாம்பவான்கள் எல்லோருமே உங்களது சிறப்பான பணிகளுக்காக வாழ்த்துகளை தெரிவிப்பார்கள். திரைத்துறைக்கு மிகப்பெரிய வெற்றியை காட்டிவிட்டீர்கள். இந்த வெற்றி அனைத்தையும் விட பெரியது” என்று கூறியுள்ளார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.