Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

பாலிவுட் நடிகரின் ட்விட்டர் கணக்கு ஊடுருவல்: துருக்கிய ஹாக்கர்கள் கைவரிசை

அமிதாப் பச்சன்

பாலிவுட் மாபெரும் நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு ஹக்கர்களால் ஹாக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு அய்யில்டிஸ் டிம் என்ற அமைப்பால் ஹாக் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. அய்யில்டிஸ் டிம் என்ற அமைப்பு  துருக்கிய நாட்டை சேர்ந்த அமைப்பாக கூறினர். 

ட்விட்டர் கணக்கில் உள்ள புகைப்பட பகுதியில் நடிகர் அமிதாப் பச்சனின் புகைப்படத்தை நீக்கி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படம் பதிவேற்றி உள்ளனர். மேலும் கணக்கில் லவ் பாகிஸ்தான் என்ற சொற்களும் துருக்கிய நாட்டின் தேசிய கொடியும் பதிவேற்றி உள்ளனர். மும்பை காவல்துறையினர், சைபர்  குழுவிற்கு தகவல் தெரிவித்ததாகவும், இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் நடிகரின் அட்டை படத்தை நீக்கி விமானத்தில் கழுகுடன் குழுவினர் இருப்பது போன்று விளம்பர நோக்கில் புகைப்படம் பதிவேற்றி உள்ளனர்.

 இது உலகம் முழுவதிற்கும் ஒரு முக்கிய அறிவிப்பு, துருக்கிய கால்பந்து வீரர்களின் மீது ஐஸ்லேண்ட்  குடியரசின் பொறுப்பற்ற நடத்தை கண்டனத்திற்குரியது. நாங்கள் மெதுவாக பேசுகிறோம் ஆனால் ஒரு தடியை கொண்டு இங்கே பெரிய சைபர் தாக்குதல் பற்றி உங்களுக்கு தெரிவிக்கிறோம் என அய்யில்டிஸ் டிம் சைபர் ஆர்மி  ஹாக் செய்த பிறகு தனது முதல் டீவீட்டை பதிவு செய்துள்ளது. சில நிமிடங்கள் கழித்து மற்றொரு ட்வீட் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களைப் பற்றி வெளியானது. 

மேலும் இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ இணைப்பை ஒன்று வழங்கி உங்கள் ஆதரவிற்கு காத்திருக்கிறோம் என குறிப்பிட்டு இருந்தனர். அவர்கள் குறிப்பிட்டு இருந்த இணைப்பு சரிபார்க்கப்படாத இணைப்பாக இருந்தது. சைபர் குழுவிற்கும் மகாராஷ்டிரா சைபர் குழுவிற்கும் அமிதாப் பச்சனின்  ஹாக் செய்யப்பட்ட கணக்கு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் கூடுதல் தகவல்களை மும்பை காவல் துறையினர் ஊடகங்களுக்கு அறிவிப்பை வெளியிடுவர்.

முன்பு அதே குழுவினர் நடிகர்கள் ஷாஹித் கபூர் மற்றும், அனுப்பம் க்ஹெர் ட்விட்டர் கணக்கினையும்  ஹாக் செய்துள்ளனர். ட்விட்டர் கணக்கு அரை மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டதாக சைபர் வட்டாரங்கள் தெரிக்கின்றது.

பாலிவுட் நடிகரின் ட்விட்டர் கணக்கு ஊடுருவல்: துருக்கிய ஹாக்கர்கள் கைவரிசை