Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2025.
All Rights Reserved

நடிகர் விக்ரம் வீர தீர சூரன் மார்ச் 27ஆம் தேதி வெளியாகிறது

வீர தீர சூரன்

மீண்டும் விக்ரம்! பன்முகத் திறன் கொண்ட நடிகரான இவர் தனது அடுத்த படமான வீர தீர சூரனுடன் மார்ச் 27, 2025 அன்று ரிலீஸ்க்காகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மிகுந்த வரவேற்பை பெற்றுளளது.

கடந்த சில வருடங்களாக விக்ரம் நடித்த படங்கள் பெரிதளவு வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. பொன்னியின் செல்வன்: பாகம் 1 மற்றும் பகுதி 2 இல் ஆதித்த கரிகாலனாக அவரது நடிப்பு மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.

பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் (2024) வந்தது. கதை கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விக்ரமின் முரட்டுத்தனமான நடிப்பு படத்தை தனித்து நிற்க வைத்தது. எதிர்பார்த்த அளவிற்கு தங்கலான் படம் வசூல் செய்யவில்லை.

வீர தீர சூரன் தமிழ் படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். பண்ணையாரும் பத்மினியும், சித்தையும் போன்ற யதார்த்தமான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர். வீர தீர சூரன் படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் அசத்தலான இசை என்று பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார், வீர தீர சூரன் படத்திற்கு இசையமைத்துள்ளார். விக்ரமும் ஏற்கனவே தெய்வ திருமகள், தாண்டவம், தங்கலான் போன்ற படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இவர்களின் கூட்டணி, வெற்றிப்படங்களில் வரிசையில் உள்ளதால், வீர தீர சூரன் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றி பெறப்போகுதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

நடிகர் விக்ரம் வீர தீர சூரன் மார்ச் 27ஆம் தேதி வெளியாகிறது