ads

மருத்துவர் மற்றும் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்

மருத்துவர் மற்றும் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்

மருத்துவர் மற்றும் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்

மருத்துவர் மற்றும் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்:திரைப்படத்தில் பல உள்ளங்களை கொள்ளை கொண்ட இளம் நடிகர் மற்றும் தோல் மருத்துவர் சேதுராமன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தது இவரை பின்பற்றும் கோடி கணக்கான ரசிகர்கள் மற்றும் நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

36 வயதான சேதுராமன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியால் மக்களிடையே பிரபலம் அடைந்தார், பின்னர் பெரிய அளவில் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.

சேதுராமன் தோல் மருத்துவர் என்பதால், இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் மக்களுக்கு தேவைப்படும் தோல் குறிப்பிட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்தும், பலரின் தோல் நோயின் அறியாமையை குறித்து தெளிவுபடுத்தி பலரின் மனதை கவர்ந்தார். இவரை பலரும் சமூக வலைத்தளத்தில் பின் தொடர்ந்தார்கள் மற்றும், இவர் கூறும் ஆலோசனைகள் பலருக்கும் உதவியாக இருந்தது.

சிறு வயது உள்ள பிரபலங்களில் மிக முக்கியமானவர் சேதுராமன், ஆனால் நேற்று 26ஆம் தேதி மார்ச் 2020 மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியான பின், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 144 தடையால் மக்கள் இவரை காண முடியாமல் இருப்பதாக தங்களது சமூக வலைத்தளத்தில் தங்களது சோகத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

இவருக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது மற்றும் இவரின் இறப்பை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை என்று பிரபலங்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் மற்றும் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்

மருத்துவர் மற்றும் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்