ads

99 சாங்ஸ் தமிழ் முழு படம் தியேட்டரில் காணுங்கள்

99 சாங்ஸ் தமிழ் படம்

99 சாங்ஸ் தமிழ் படம்

99 சாங்ஸ் படத்தின் மூலம் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக மாறியுள்ளார் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். விவேஷ் கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் 99 பாடல்கள் (2021) இன்று முதல் உலகெங்கிலும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.

முக்கிய கதாபாத்திரத்தில் ஈஹான் பட் நடித்துள்ளார், இவர் சுமார் 750 நபர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியாளர்களில் 99 சாங்ஸ் படத்தின் கதா நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏ ஆர் ரஹ்மான் குறிப்பிடுகையில், ஈஹான் பட் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்காக ஒரு வருடம் இசை புரிதலுக்கு பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

பெண் கதாபாத்திரத்தை அமெரிக்க நடிகை, மாடல் மற்றும் தயாரிப்பாளரான எடில்ஸி வர்காஸ் நடித்துள்ளார். மேலும், 99 சாங்ஸ் படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார், அவர்கள் ஆதித்யா சீல், லிசா ரே, மனிஷா கொய்ராலா.

இந்த படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது. 99 சாங்ஸ் தமிழ் படத்தில், கதாநாயகன் ஈஹான் பட் கதாபாத்திரத்திக்கான தமிழ் டப்பிங் ஜி.வி.பிரகாஷ் பேசியுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் காதிஜா ரெஹ்மான், கதாநாயகிக்கு தமிழ் டப்பிங் பேசியுள்ளார்.

99 சாங்ஸ் படம், நாயகன் ஜெய் ஜெய்யின் வாழ்க்கையில் இசைக்கும் காதலுக்கும் நடக்கும் இரு பெரிய போராட்டத்தை அழகாக சித்தரித்துள்ளார் இயக்குனர் விவேஷ் கிருஷ்ணமூர்த்தி.

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், இதில் இசைக்கும் அதன் பின்னணியில் நடக்கும் காட்சிகளை, பிரமிக்கும் அளவிற்கு திரைக்கதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பல நுணுக்கமான இசை கருவிகளை நல்ல ஒளிப்பதிவில் உள்ள திரையரங்கில் பார்த்தால், படத்தின் இசைக்கு அடிமையாவது நிச்சியம். 99 சாங்ஸ் திரைப்படத்தில் 14 பாடல்கள் உள்ளன.

நாயகன் ஜெய் ஜெய்யின் வாழ்க்கையில் இசை ஒரு முக்கிய பங்குவகிக்கிறது. இந்த சூழ்நிலையில்  நாயகியை எவ்வாறு சந்திக்கிறார், இசை மற்றும் காதல் என்று வரும்போது அவர் யாரைத் தேர்ந்தெடுப்பார், அவரது குடும்பத்தில் அவரைத் தொந்தரவு செய்தது மற்றும் அவர் எவ்வாறு தடைகளை எதிர்கொண்டார் என்பதே கதை.

மேலும் ஆஸ்கார் விருது வென்ற ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கும் அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இந்த படம் அவரது நிஜ வாழ்க்கையின் காட்சிகளை வெளிப்படுத்தாது என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.

99 சாங்ஸ் (2021) படம் ஏஆர் ரஹ்மானின் முதல் அறிமுகப் படம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.

மக்கள் அனைவரும் படத்தை பைரசி இணையதளங்களை தவிர்த்து, பெரிய திரையில் படத்தை பார்ப்பதன் மூலம் ஏஆர் ரஹ்மானின் இசை விருந்தை முழுமையாக உணரலாம். 

99 சாங்ஸ் தமிழ் முழு படம் தியேட்டரில் காணுங்கள்