99 சாங்ஸ் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்தது
விக்னேஷ் (Author) Published Date : Apr 16, 2021 16:27 ISTபொழுதுபோக்கு
இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து மிக பிரமாண்டமாக ஆஸ்கர் விருது பெற்ற இசை உலகின் ராஜா ஏ ஆர் ரஹ்மான் அவர்களால் எடுக்கப்பட்ட படம் "99 சாங்ஸ்". ஒரு இசை கலைஞன் தனது இசை துறைக்காக செலுத்தும் காணிக்கையாக இந்த படம் பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், 99 சாங்ஸ் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள பல பதிப்புகளில் பதிவேற்றம் செய்துள்ளனர், இது நடந்தது இன்று மதியம் சுமார் 3 மணி அளவில்.
இசை அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய ஏ ஆர் ரஹ்மான், 99 சாங்ஸ் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், எழுதளராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
மிக பெரிய எதிர்பார்பில் ரிலீஸ் ஆகியிருக்கும் 99 சாங்ஸ் படத்தை, தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் ரிலீஸ் ஆன சில மணிநேரங்களில் பல எச்.டி பதிப்புகளில் பதிவேற்றம் செய்திருப்பது, இசை ரசிகர்களுக்கு வேதனை அளிக்கும் வகையில் இருக்கிறது.
99 சாங்ஸ் படத்தை தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணயத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பார்ப்பதன் மூலம், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் பயன்படுத்திய பல நுணுக்கமான இசை கருவிகளின் ஒலியை உணருவது கடினம்.
ஒரு நல்ல இசை ரசிகன் படத்தை தியேட்டர்களில் பார்ப்பதனால், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தில் வரும் படத்தின் 14 பாடல்கள் மற்றும் பின்னணி இசையை முழுமையாக உணர முடியும்.
விவேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் 99 சாங்ஸ் படத்தின் கதாநாயகனாக ஈஹான் பட் நடித்துள்ளார், கதாநாயகியாக எடில்ஸி வர்காஸ் நடித்துள்ளார். நாயகன் ஈஹான் பட் இந்த படத்திற்காக
ஒரு வருடம் இசை புரிதலுக்கு பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
காதலையும் இசையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட 99 சாங்ஸ் படத்தில், காதலுக்காக இசையை விட்டுக்கொடுத்தாரா அல்லது, இசைக்காக தனது காதலை விட்டுக்கொடுத்தாரா என்பதை திரையரங்கிற்கு சென்று மகிழவும்.
99 சாங்ஸ் முழு படத்தையும் தியேட்டர்களில் பார்ப்பது நல்லது, தயாரிப்பாளர் மற்றும் ஒரு படத்தை தயாரிக்க வேலை செய்யும் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உதவும். தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் 99 சாங்ஸ் படத்தை பார்ப்பதன் மூலம் இசையை ரசிப்பது கடினம்.