ரோலர் கோஸ்டரில் பயணம் செய்தது போல் கடந்த 17 வருட சினிமா வாழ்க்கை, தனுஷ் பெருமிதம்
கௌரிசங்கர் (Author) Published Date : May 10, 2019 21:45 ISTபொழுதுபோக்கு
கோலிவுட்டில் இருக்கும் டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது முதல் படம் “துள்ளுவதோ இளமை”, இந்த படம் 2௦௦2 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடித்த பொழுது நடிகர் தனுஷ் சிறு பையன் என்று எல்லாராலும் கருதப்பட்டார். நிறைய பேர் தனஷ் அவர்களின் தோற்றத்தை கிண்டலும் செய்தனர். இருந்தாலும் மனம் தளராது தனது நடிப்பு திறமையை வளர்த்து கொண்டு, தொடர்ந்து நடித்து வந்தார். நிறைய ஹிட் படங்கள் தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தார். நடிப்போடு நிறுத்தாமல் பாடல் பாடினார், படங்களை தாயரித்தார் நிறைய இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் வாய்ப்புகள் அளித்து வருகிறார்.
சமீபத்தில் அதிகமான பாடல்களை எழுதிய நடிகர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். கோலிவுட் மட்டும் அல்லாமல் பாலிவுட்டிலும் நடித்துள்ளார், தற்போது ஹாலிவுட்டில் “தி எக்ஸ்ட்ராடினேறி ஜர்னி ஆப்ஃ ஃபகிர்” என்ற படத்தில் நடித்து உள்ளார் தனுஷ். தற்பொழுது தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் “ரவுடி பேபி” என்ற பாடலின் வீடியோ யூட்யூப் சேனலில் 450 மில்லியன் வியூஸ் வந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இப்படி தொடர்ந்து சாதனை புரிந்து வரும் தனுஷ், இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்து உள்ளார். அது என்னவென்றால் அவரது முதல் படமான துள்ளவதோ இளமை படம் ரிலீஸ் ஆகி இன்றோடு 17 வருடங்கள் ஆகின்றது என்பது தான். அது மட்டும் அல்லாமால் ஒரு சிறு பையனாக இருந்த தன்னை நடிகனாகவும், ஒரு ஸ்டாராகவும் ஏற்றுக்கொண்டதற்கும். தன்னுடைய தோல்வி வெற்றி என எல்லாவற்றிலும் கூட இருந்ததற்காகவும் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முதல் படம் ரிலீஸ் ஆகி 17 வருடம் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை என்றும். ஏதோ ஒரு ரோலர் கோஸ்டர் ரைடில் பயணம் செய்தது போல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். என் மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் இவ்வளோ தூரத்துக்கு தன்னை கொண்டு வந்துள்ளது என்றும் தனஷ் டிவிட்டர்ரில் பதிவிட்டுள்ளார். 17 வருடம் கடந்து வந்த பாதையின் போஸ்டர்களையும் வீடியோகளையும் பார்க்கும் பொழுது இன்னும் நிறைய தைரியமும் தெம்பும் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார் தனுஷ்.
எல்லாரிடமும் இதே மாதிரியான அன்பு செலுத்துவோம், கனவுகள் பழிக்கும்படியான உலகை ஊருவாக்குவோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து பதினேழு வருடங்கள் ஆகியதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.